வேலூர் மாவட்டத்தில் 69 சதவீதம் பேர் மட்டுமே ரேஷன்அட்டையில் ஆதார் எண் இணைப்பு அதிகாரிகள் தகவல்
வேலூர் மாவட்டத்தில் இதுவரை 69 சதவீதம் பேர் மட்டுமே தங்கள் ரேஷன் அட்டைகளில் ஆதார் எண் இணைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆதார் எண் இணைக்கும் பணி மத்திய, மாநில அரசுகள் வழங்கும் திட்டங்கள் மற்றும் உதவித்தொகை பெறுவதற்கு பயனாளிகள் தங்கள் வங்கிக்கணக்குகள
வேலூர்,
வேலூர் மாவட்டத்தில் இதுவரை 69 சதவீதம் பேர் மட்டுமே தங்கள் ரேஷன் அட்டைகளில் ஆதார் எண் இணைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆதார் எண் இணைக்கும் பணிமத்திய, மாநில அரசுகள் வழங்கும் திட்டங்கள் மற்றும் உதவித்தொகை பெறுவதற்கு பயனாளிகள் தங்கள் வங்கிக்கணக்குகளில் ஆதார் எண்ணை இணைத்து வருகிறார்கள்.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் பழைய ரேஷன் அட்டைகளுக்கு பதில் ஸ்மார்ட் கார்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக ரேஷன்அட்டையுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டு வருகிறது. கடந்த 2 மாதங்களாக இந்த பணி நடைபெற்று வருகிறது.
வேலூர் மாவட்டத்தில் 1,820 ரேஷன் கடைகள் மூலம் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட ரேஷன் அட்டைகளுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோன்று ஆதார் எண் இணைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.
69 சதவீதம் பேர் மட்டும்...ஆதார் எண் இணைக்காத ரேஷன் அட்டைகள் குறித்து வேலூர் மாவட்டத்தில் கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. இந்த கணக்கெடுப்பின்படி இதுவரை 69 சதவீதம் பேர் மட்டுமே ஆதார் எண் இணைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பெரும்பாலானவர்கள் இதுவரை ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்கவில்லை. புகைப்படம் எடுத்த பலருக்கு ஆதார் அட்டை வரவில்லை.
இதனால் 31 சதவீதம் பேர் ஆதார் எண்ணை இணைக்க முடியவில்லை. இந்த நிலையில் அதிகாரிகள் வீடு, வீடாக சென்று ரேஷன் அட்டையுடன்ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறார்கள். ஆய்வின்போது ஆதார் எண் இணைக்காததற்கான காரணம் குறித்தும் கேட்டறிந்து வருகிறார்கள்.
உடனடியாக இணைக்க வேண்டும்ஒரு குடும்பத்தில் 4 பேர் இருந்தால் அதில் 2 பேர் குழந்தைகளாக இருக்கிறார்கள். அவர்களுக்கு ஆதார் எடுக்க முடியாமல் உள்ளது. இதனால் 2 பேரின் ஆதார் எண் மட்டுமே பதிவு செய்ய முடிகிறது. சிலர் ஆதார் அட்டை இருந்தும் ரேஷன்அட்டையில் இணைக்காமல் உள்ளனர்.
ஆய்வின்போது ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுத்து ஆதார் அட்டை கிடைக்காதவர்கள், ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுத்ததற்கான ரசீது இருந்தால் அதை வட்ட வழங்கல் அலுவலகத்தில் கொடுத்து ரேஷன்அட்டையுடன் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இறந்தவர்கள், வேறு இடங்களுக்கு மாறுதலாகி சென்றவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதா என்பது குறித்தும் ஆய்வு செய்து இறந்தவர்கள் பெயர் ரேஷன் அட்டையில் நீக்காமல் இருந்தால் அவர்களின் பெயர்களை நீக்கும் பணியையும் அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.
ஒரு குடும்பத்தில் 4 பேர் இருந்து 2 பேரின் ஆதார் எண் மட்டுமே இணைக்கப்பட்டிருந்தால் 2 பேருக்கு மட்டுமே அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுகிறது. மேலும் இந்த மாத இறுதிக்குள் ஆதார் எண் இணைக்கவேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளதால் இதுவரை ஆதார் எண் இணைக்காதவர்கள் உடனடியாக இணைக்குமாறு அதிகாரிகள் வலியுறுத்தி வருகிறார்கள்.