ஜக்கசமுத்திரத்தில் சட்ட விழிப்புணர்வு முகாம்
காரிமங்கலம் ஒன்றியம் ஜக்கசமுத்திரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட உரிமையியல் நீதிபதி மற்றும் பாலக்கோடு சட்ட பணிக்குழுத்தலைவர் விஜய்கார்த்திக் தலைமை தாங்கி உலக எய்ட்ஸ் தினம்
காரிமங்கலம்,
காரிமங்கலம் ஒன்றியம் ஜக்கசமுத்திரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட உரிமையியல் நீதிபதி மற்றும் பாலக்கோடு சட்ட பணிக்குழுத்தலைவர் விஜய்கார்த்திக் தலைமை தாங்கி உலக எய்ட்ஸ் தினம் குறித்தும், எய்ட்ஸ் பாதித்த நபர்களை பாதுகாப்பது குறித்தும் விளக்கி பேசினார். பாலக்கோடு வக்கீல்கள் சங்க தலைவர் பெரியசாமி, செயலாளர் நூரந்தன், பொருளாளர் விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்ட சட்ட பணிக்குழு சேர்ந்த ஸ்ரீதரன் வரவேற்றார். இதில் பாலக்கோடு குற்றவியல் நீதிபதி சந்தான கிருஷ்ணசாமி, தர்மபுரி மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர். ஜெகதீஸ்குமார், தாசில்தார் கண்ணன், மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாடு அலகின் மாவட்ட திட்ட மேலாளர் உலகநாதன், வட்டார வளர்ச்சி அலுவலர் தேவாதி அம்மாள், வட்டார மருத்துவ அலுவலர் அனுராதா மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகள், பொதுமக்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் மூர்த்தி நன்றி கூறினார்.