ஸ்ரீவைகுண்டம் பகுதிகளில் அதி விரைவு படை வீரர்கள் கொடி அணிவகுப்பு

ஸ்ரீவைகுண்டம் பகுதிகளில் அதி விரைவு படை வீரர்கள் கொடி அணிவகுப்பு

Update: 2016-12-22 22:45 GMT
ஸ்ரீவைகுண்டம்,

ஸ்ரீவைகுண்டம் பகுதிகளில் மத்திய அதி விரைவு படை வீரர்கள் கொடி அணிவகுப்பு நடத்தினர்.

கொடி அணிவகுப்பு


கோவையில் இருந்து மத்திய அதி விரைவு படை உதவி கமாண்டர் ராதாகிருஷ்ணன் தலைமையில், 40 அதி விரைவு படை வீரர்கள் நேற்று காலையில் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் போலீஸ் நிலையத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள் ஸ்ரீவைகுண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு மாதவனிடம் ஆலோசனை நடத்தினர்.

தொடர்ந்து ஸ்ரீவைகுண்டம் சுற்று வட்டாரத்தில் பதற்றம் நிறைந்த பகுதிகளான கொங்கராயகுறிச்சி, பத்மநாபமங்களம், மணக்கரை, வெள்ளூர், பேரூர், ஆயத்துரை, சிவராமமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் மத்திய அதிவிரைவு படைவீரர்கள் கொடி அணிவகுப்பு நடத்தினர்.

திருச்செந்தூரில்...


இதுகுறித்து அதி விரைவு படை உதவி கமாண்டர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், ‘பதற்றம் நிறைந்த பகுதிகளில் வன்முறை சம்பவங்கள் நிகழும்போது அதி விரைவு படைவீரர்கள் விரைந்து சென்று பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிப்பார்கள்.

இதுகுறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவே கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது. இன்று (வெள்ளிக்கிழமை) திருச்செந்தூர் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் கொடி அணிவகுப்பு நடைபெறும், என்று தெரிவித்தார்.

மேலும் செய்திகள்