குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல், வன்கொடுமைக்கு மதுவே காரணம் கவர்னர் கிரண்பெடி வேதனை

புதுச்சேரி,
குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல், வன்கொடுமைக்கு மதுவே காரணம் என்று கவர்னர் கிரண்பெடி வேதனை தெரிவித்தார்.
விழிப்புணர்வு பேனர்
புதுச்சேரி மாநில சட்டப்பணிகள் ஆணையத்தின் நலத்திட்டங்களில் ஒன்றான குழந்தைகளை வன்கொடுமைகள் மற்றும் பாலியல் தொல்லையில் இருந்து பாதுகாப்பது சம்பந்தமான விழிப்புணர்வு பேனர், சிலைடு வெளியிடும் நிகழ்ச்சி கடலூர் ரோட்டில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உள்ள கருத்தரங்கு கூடத்தில் நேற்று நடந்தது.
சென்னை ஐகோர்ட்டு நீதிபதியும், புதுச்சேரி மாநில சட்டப்பணிகள் ஆணைய செயல் தலைவருமான ஜெய்சந்திரன் தலைமை தாங்கினார். புதுவை தலைமை நீதிபதி ராமதிலகம் வரவேற்றுப் பேசினார். விழாவில் கவர்னர் கிரண்பெடி கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
மதுவால் குற்றங்கள் அதிகம்
சட்டப்பணிகள் ஆணையத்தின் சேவை மக்களுக்கு அதிகம் தேவைப்படுகிறது. தினமும் கவர்னர் மாளிகையில் மாலையில் 5 மணி முதல் 6 மணி வரை பொதுமக்களிடம் குறைகளை கேட்டு வருகிறேன். உடனடியாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை அழைத்து அவர்களது பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுத்து வருகிறேன்.
என்னிடம் வரும் கோரிக்கை மனுக்களில் பெரும்பாலானவை போலீசாரால் தலையிட முடியாத சிவில் பிரச்சினைகளாகவே உள்ளன. இந்த பிரச்சினைகளுக்கு மக்கள், நீதிமன்றங்களை நாடும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
தேசிய நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகள் இருக்கக் கூடாது என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்கின்றேன். மதுவின் காரணமாகவே குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல், வன்கொடுமை போன்ற அதிகப்படியான குற்றங்கள் நடைபெறுகின்றன. மது அருந்துவோர் எண்ணிக்கை குறையும் போது குற்றங்கள் பெருமளவில் குறையும். மது விற்பனையின் மூலம் அரசுக்கு கிடைக்கும் வருவாய், சுகாதாரத்திற்காகவும், குற்றங்கள் தடுப்பு, இதர தீமைகளுக்கே செலவு செய்யப்படுகிறது. நாட்டில் மதுக்கடைகள் குறைக்கப்பட்டால் குற்றங்களும் குறையும்.
இவ்வாறு கிரண்பெடி கூறினார்.
நீதிபதி ஜெய்சந்திரன்
விழாவில் ஐகோர்ட்டு நீதிபதி ஜெய்சந்திரன் பேசியதாவது:-
புதுச்சேரி மாநில வளர்ச்சிக்காக கவர்னர் கிரண்பெடி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். பொதுமக்கள் அரசியல் சட்டத்தின்படி பெற வேண்டிய உரிமைகளையும், சட்ட விழிப்புணர்வையும் ஆணையம் மூலம் நிறைவேற்றி வருகிறோம். குழந்தைகளை பாலியல் வன்கொடுமைகள், துன்புறுத்தல்களில் இருந்து பாதுகாப்பது மிகவும் முக்கியமானதாகும். இதுகுறித்து பொதுமக்கள் மத்தியில் தீவிர விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
ஏழை, எளிய அடித்தட்டு மக்களுக்கு நீதி கிடைக்கச் செய்ய வேண்டும். இதற்கு தொண்டு நிறுவனங்களின் உதவி தேவைப்படுகிறது. பணியிடங்கள், பள்ளிகளில் குழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமைகள், துன்புறுத்தல் நேரிடுகிறது. குழந்தைகளுக்கு அன்பு, பாசம், தேவைப்படுகிறது. ஆதரவற்ற குழந்தைகள் மீது தனி அக்கறை செலுத்த வேண்டியுள்ளது. குழந்தைத் திருமணம், குழந்தைத் தொழிலாளர் முறையையும் ஒழிக்க வேண்டியுள்ளது.
ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்
குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல் சம்பவங்களில் 50 சதவீதம் தெரிந்தவர்களே ஈடுபடுகின்றனர். சில நேரங்களில் பெற்றோரும் காரணமாக உள்ளனர். குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல் புகார்கள் தொடர்பாக நீதிமன்றத்தில் தனி விசாரணையும், கேமரா மூலம் தனியாகவும் விசாரணைகள் நடத்தப்படுகின்றன. குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க அனைத்து தரப்பினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்
இவ்வாறு ஜெய்சந்திரன் கூறினார்.
நிகழ்ச்சியில் அரசு செயலாளர்கள் செந்தில்குமார், அருண் தேசாய், புதுவை மாநில சட்டப்பணிகள் ஆணைய உறுப்பினர் செயலர் சோபனா தேவி, வக்கீல் சங்கத் தலைவர் மு.திருக்கண்ணசெல்வன் மற்றும் வக்கீல் சங்க நிர்வாகிகள், வக்கீல்கள், தன்னார்வல தொண்டு நிறுவனத்தினர் பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் வீடுகள் தோறும் சென்று சட்டப்பணிகள் ஆணையத்தின் கையேடுகள் வழங்கும் பணி செய்த சட்டக்கல்லூரி மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்குதல், காரைக்கால், மாகி, ஏனாம் பகுதிகளில் உள்ள சிறைச்சாலைகளுக்கு புகார் பெட்டிகள் வழங்குதல், புதுச்சேரி மாநில சட்டப்பணிகள் ஆணையத்தின் செயல்பாட்டின் நூல் வெளியீட்டு விழா, சட்டப்பணிகள் ஆணையத்தின் சார்பில் திருமண பதிவு செய்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா, புதுச்சேரி மாநில சட்டப்பணிகள் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்த விவரங்களை குறுந்தகவல் மூலம் பொதுமக்களுக்கு தெரியப்படுத்துதல் போன்றவையும் நடத்தப்பட்டன.