நிலுவை சம்பளத்தை வழங்கக்கோரி கவர்னரிடம் பாசிக் ஊழியர்கள் மனு

புதுச்சேரி,
நிலுவையில் உள்ள சம்பளத்தை வழங்கக்கோரி பாசிக் ஊழியர்கள் கவர்னரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
பாசிக் ஊழியர்கள்
புதுச்சேரி பாசிக் அனைத்து ஊழியர்கள் ஒருங்கிணைப்பு குழுவினர் நிலுவையில் உள்ள சம்பளத்தை வழங்க வேண்டும், மாதந்தோறும் சம்பளம் முழுவதையும் வழங்க வேண்டும் என்பது உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள்.
பாசிக் தலைமை அலுவலகம் முன்பு கஞ்சி காய்ச்சும் போராட்டம், சுதேசி மில் அருகே உண்ணாவிரத போராட்டம், பட்டை நாமம் அணிந்து பிச்சை எடுக்கும் போராட்டம் என பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.
கவர்னரிடம் மனு
இந்தநிலையில் நேற்று மதியம் அவர்கள் சாரம் அவ்வைத்திடலில் கூடினர். அங்கிருந்து கவர்னர் மாளிகை நோக்கி ஊர்வலமாக சென்றனர். அப்போது அவர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்திருந்த னர். இந்த ஊர்வலம் காமராஜர் சாலை, நேரு வீதி, மிஷன்வீதி வழியாக மாதா கோவில் வீதியை அடைந்தது. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். அங்கு அவர்கள் போராட்டம் நடத்தினர்.
பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் முக்கிய நிர்வாகிகள் மட்டும் கவர்னரை சந்திக்க போலீசார் அனுமதி அளித்தனர். இதனை தொடர்ந்து முக்கிய நிர்வாகிகள் 10 பேர் கவர்னரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். பின்னர் அவர்கள் போராட்டத்தினை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.