சென்னை விமான நிலையம் அருகே காரில் கடத்திய ரூ.1 கோடியே 34 லட்சம் புதிய ரூபாய் நோட்டுகள் பறிமுதல் 5 பேர் கைது

ஆலந்தூர்,
சென்னை விமான நிலையம் அருகே காரில் கடத்திய ரூ.1 கோடியே 34 லட்சம் மதிப்புள்ள புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பறி முதல் செய்தனர்.
இது தொடர்பாக காரில் வந்த 5 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
அதிகாரிகள் கண்காணிப்பு
சென்னை விமான நிலையம் அருகே மீனம்பாக்கம்-திரிசூலம் இடையே பெருமளவில் புதிய ரூபாய் நோட்டுகளை ஒரு கும்பல் பரிமாற்றம் செய்ய உள்ளதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் நேற்று காலை சென்னை விமான நிலையம் அருகே ஜி.எஸ்.டி. சாலையில் தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு காரை வழிமறித்து சோதனை செய்தனர். அந்த காரில் 5 பேர் இருந்தனர். அவர்களிடம் அதிகாரிகள் விசாரித்த போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர்.
ரூ.1 கோடி 34 லட்சம்
அவர்களிடம் ஒரு கைப்பை இருந்தது. சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அந்த பையை பிரித்து பார்த்தனர். அதில் கருப்பு நிற பையால் சுற்றப்பட்ட நிலையில் கட்டுக்கட்டாக புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
அந்த பணத்தை எண்ணிப் பார்த்த போது அதில் ரூ.1 கோடியே 34 லட்சம் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இருந்தன. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மேலும் அவர்களிடம் ரூ.4¾ லட்சம் மதிப்புள்ள 7 ஆயிரம் அமெரிக்க டாலர்களும் இருந்தன. அவற்றையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
5 பேர் கைது
இது தொடர்பாக காரில் வந்த சென்னையை சேர்ந்த முக்தர், ரிஷ்வான் உள்பட 5 பேரையும் வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.
விசாரணையில் அவர்கள், ஹவாலா பணம் மோசடி கும்பலை சேர்ந்தவர்கள் என்பதும், அந்த பணத்தை விமானம் மூலம் வெளிநாட்டுக்கு கடத்திச்செல்வதற்காக விமான நிலையத்திற்கு கொண்டு வந்ததும் தெரிந்தது.
இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார்?, காரில் வந்த 5 பேருக்கும் புதிய ரூபாய் நோட்டுகள் எங்கிருந்து கிடைத்தது?. அந்த பணத்தை யாருக்கு கொடுக்க கடத்தி வந்தனர்? என்பது பற்றிய தகவல்களை சேகரிப்பதற்காக கைதான 5 பேரையும் சென்னையில் உள்ள தங்கள் அலுவலகத்துக்கு அழைத்துச்சென்று மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.