காஞ்சீபுரத்தில் தடுப்புச்சுவரில் பஸ் மோதி 15 பேர் காயம்

காஞ்சீபுரத்தில் தடுப்புச்சுவரில் பஸ் மோதி 15 பேர் காயம்

Update: 2016-12-22 20:46 GMT
காஞ்சீபுரம்,

காஞ்சீபுரத்தில் தடுப்புச் சுவரில் பஸ் மோதி 15 பேர் காயம் அடைந்தனர்.

தடுப்புச்சுவர் மீது மோதியது

தாம்பரத்தில் இருந்து வேலூருக்கு நேற்று முன்தினம் இரவு 11½ மணிக்கு 40 பயணிகளுடன் அரசு பஸ் புறப்பட்டது. இந்த பஸ்சை வேலூரை சேர்ந்த உமாசங்கர் ஓட்டி சென்றார். அந்த பஸ் இரவு 1 மணிக்கு காஞ்சீபுரம் பஸ் நிலையத்திற்கு வந்தது. அங்கு பயணிகளை இறக்கி விட்டு விட்டு 15 பயணிகளுடன் பஸ் மீண்டும் புறப்பட்டது.

அந்த பஸ் காஞ்சீபுரம் மேற்கு ராஜ வீதியில் குமரகோட்டம் கோவில் அருகே சென்றபோது பஸ்சின் டயர் பஞ்சர் ஆகி சாலையின் நடுவில் இருந்த தடுப்புச்சுவர் மீது பயங்கரமாக மோதியது.

15 பயணிகள் காயம்

நள்ளிரவு நேரமானதால் பயணிகள் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தனர். அதனால் பஸ் மோதிய வேகத்தில் பஸ்சில் பயணம் செய்த தாம்பரத்தை சேர்ந்த காத்திகா, லோகாம்பிகை, செல்வி, ரவிச்சந்திரன் உள்பட 15 பயணிகள் காயம் அடைந்தனர். அவர்களுக்கு காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு மீண்டும் மாற்று பஸ்சில் வேலூருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இது குறித்து பெரிய காஞ்சீபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்