புதுவை அரசுத்துறையில் ரூ.5 ஆயிரத்துக்கு மேலான பண பரிவர்த்தனைகள் இணையதளம் மூலமே நடைபெற வேண்டும் அரசு அதிகாரிகளுக்கு நிதித்துறை செயலாளர் சுற்றறிக்கை
புதுவை அரசுத்துறையில் ரூ.5 ஆயிரத்துக்கும் மேலான பண பரிவர்த்தனைகள் அனைத்தும் இணையதளம் மூலமே நடைபெற வேண்டும் என்று அரசு துறை அதிகாரிகளுக்கு நிதித்துறை செயலாளர் கந்தவேலு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். சுற்றறிக்கை புதுவையில் பணமில்லா பரிவர்த்தனைகளை அமல்படு
புதுச்சேரி
புதுவை அரசுத்துறையில் ரூ.5 ஆயிரத்துக்கும் மேலான பண பரிவர்த்தனைகள் அனைத்தும் இணையதளம் மூலமே நடைபெற வேண்டும் என்று அரசு துறை அதிகாரிகளுக்கு நிதித்துறை செயலாளர் கந்தவேலு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
சுற்றறிக்கைபுதுவையில் பணமில்லா பரிவர்த்தனைகளை அமல்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. பணத்துக்கு பதிலாக பண அட்டைகளை பயன்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளது. இதை ஏற்க முடியாது என்று முதல்–அமைச்சர் நாராயணசாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இருந்தபோதிலும் புதுவை அரசுத்துறையில் ரூ.5 ஆயிரத்துக்கு மேலான பண பரிவர்த்தனைகள் அனைத்தும் இணையதளம் மூலமே மேற்கொள்ளப்பட வேண்டும் என நிதித்துறை செயலாளர் கந்தவேலு அனைத்து துறைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
மின்னணு முறைஅந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:–
மின்னணு முறையிலேயே அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்பட வேண்டும். அரசு துறைகளுக்கு பொருட்களை வழங்குபவர்கள், காண்டிராக்டர்கள் உள்ளிட்டவர்களுக்கும் மின்னணு முறையிலேயே பணம் வழங்கப்பட வேண்டும்.
அரசின் நலத்திட்ட உதவிகள் பெறுபவர்களுக்கும் இந்த முறையை அமல்படுத்த வேண்டும். இருந்தபோதிலும் மாற்றுத் திறனாளிகளுக்கு அடுத்த உத்தரவு வரும் வரை தற்போதைய நிலையே நீடிக்கவேண்டும்.
இதற்கு தகுந்த விவரங்களை துறை அதிகாரிகள் சேகரித்து வைத்துக்கொள்ள வேண்டும். இந்த உத்தரவுகள் தன்னாட்சி நிறுவனங்கள், சங்கங்கள், வாரியங்கள், கழகங்கள், அரசு உதவி பெறும் அனைத்து நிறுவனங்களுக்கும் பொருந்தும்.
இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.