தாம்பரம் அருகே மின்சாரம் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
தாம்பரம் அருகே மின்சாரம் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தாம்பரம்,

பொதுமக்கள் அவதி
கடந்த 12-ந்தேதி சென்னையை ‘வார்தா’ புயல் தாக்கியது. இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஏராளமான மரங்கள், மின்கம்பங்கள், டிரான்ஸ்பார்மர்கள் சாய்ந்து விழுந்தன. மின்சாரம், குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டது.
பெரும்பாலான இடங்களில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு மின்சாரம், குடிநீர் வினியோகம் சீரடைந்தது. ஆனால் சென்னை புறநகர் பகுதிகளான தாம்பரத்தை அடுத்த நெடுங்குன்றம், சதானந்தபுரம் உள்ளிட்ட பல கிராமங்களில் 10 நாட்கள் ஆகியும் இன்னும் மின்சாரம் வினியோகம் செய்யப்படாததால் அந்த பகுதிகள் இருளில் மூழ்கி கிடக்கின்றன.
தண்ணீர் இன்றி பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். மின்சாரம் இல்லாமல் இரவு நேரங்களில் கொசுக்கடியில் குழந்தைகள் தவிக்கின்றனர். பள்ளி மாணவ-மாணவிகள் அரையாண்டு தேர்வுக்கு படிக்க முடியாமல் பரிதவிக்கின்றனர்.
சாலை மறியல்
இதனால் ஆத்திரம் அடைந்த தாம்பரம் அருகே உள்ள நெடுங்குன்றம், சதானந்தபுரம் பகுதி பெண்கள் உள்பட ஏராளமான பொதுமக்கள் மின்சாரம் கேட்டு நேற்று காலை நெடுங்குன்றம் சதானந்தபுரம் பிரதான சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர்.
‘வார்தா’ புயல் தாக்கி 10 நாட்களாகியும் எங்கள் பகுதிக்கு மின்வினியோகம் வழங்கப்படவில்லை. உடனடியாக எங்கள் பகுதிக்கு மின்சாரம் வழங்க வேண்டும் என சாலையில் அமர்ந்து பெண்கள் கோஷமிட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்து வந்த பீர்க்கன்காரணை போலீசார் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம், விரைவில் மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதை ஏற்று சாலை மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.