மத்திய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்-சாலை மறியல் 50 பேர் கைது
பழைய ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்ததால் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றவும், செலவுக்கு பணம் எடுக்கவும் பொதுமக்கள் தினமும் வங்கி மற்றும் ஏ.டி.எம். வாசலில் காத்துக்
பூந்தமல்லி,
பழைய ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்ததால் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றவும், செலவுக்கு பணம் எடுக்கவும் பொதுமக்கள் தினமும் வங்கி மற்றும் ஏ.டி.எம். வாசலில் காத்துக் கிடக்கின்றனர். கடுமையான சில்லரை தட்டுப்பாடு நிலவுவதால் சிறு மற்றும் குறு தொழில் நடத்தும் மக்களும் சிரமம் அடைந்து உள்ளனர். போதுமான அளவு புதிய ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் நேற்று சென்னை விருகம்பாக்கம், சின்மயா நகர், காளியம்மன் கோவில் ரோடு பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பெண்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினார்கள். திடீரென அங்கு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள், பிரதமர் மோடியின் உருவபொம்மையை எரிக்க முயன்றனர்.
உடனடியாக அவர்களை தடுத்து நிறுத்திய விருகம்பாக்கம் போலீசார், ஆர்ப்பாட்டம், சாலை மறியலில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த 50 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களை வேனில் ஏற்றி அங்குள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.