போக்குவரத்து துறை அலுவலகம் முன்பு ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

அரசு அனுமதியின்றி இருசக்கர வாகனத்தை வாடகை விடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும், வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஆட்டோ மீட்டரை கட்டணம் இன்றி திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும், ஜி.பி.ஆர்.எஸ். மீட்டரை இலவசமாக வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்

Update: 2016-12-21 21:45 GMT

புதுச்சேரி

அரசு அனுமதியின்றி இருசக்கர வாகனத்தை வாடகை விடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும், வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஆட்டோ மீட்டரை கட்டணம் இன்றி திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும், ஜி.பி.ஆர்.எஸ். மீட்டரை இலவசமாக வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை புதுவை மாநில ஆட்டோ தொழிலாளர் நலச்சங்கத்தினர் (ஏ.ஐ.டி.யு.சி.) வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்துத்துறை அலுவலகம் முன்பு நேற்று அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் சேதுசெல்வம், தலைவர் பாளையத்தான், பொருளாளர் சேகர் ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.

ஏ.ஐ.டி.யு.சி. மாநில தலைவர் அபிசேகம், பொதுச்செயலாளர் தினேஷ் பொன்னையா ஆகியோர் வாழ்த்திப் பேசினார்கள். ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் செந்தில்முருகன், சதாசிவம், சிவசுப்ரமணியன், ராஜீ, பிரகாஷ், நடனமூர்த்தி, சதீஷ்குமார், சோமசுந்தரம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்