டெம்போ-மோட்டார் சைக்கிள் மோதல்: என்ஜினீயரிங் மாணவர் உள்பட 2 பேர் பலி வில்லுக்குறி அருகே பரிதாபம்

அழகியமண்டபம்,
வில்லுக்குறி அருகே டெம்போ-மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் என்ஜினீயரிங் மாணவர் உள்பட 2 பேர் பலியானார்கள்.
இந்த பயங்கர விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
விபத்து
குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே கிள்ளியூரை சேர்ந்தவர் ஜான் ஜேக்கப். இவருடைய மகன் ஆட்லின் ஜிஜின் (வயது 21). கூலி தொழிலாளி. கேரள மாநிலம் பத்தனம்திட்டை பதியூர் பகுதியை சேர்ந்த வர்க்கீஸ் தாஸ் மகன் ஜீசன் டி வர்க்கீஸ் (23), மார்த்தாண்டம் பகுதியில் உள்ள ஒரு என்ஜினீயரிங் கல்லூரியில் மெக்கானிக்கல் பிரிவில் 3-ம் ஆண்டு படித்தார். ஆட்லின் ஜிஜினும், ஜீசன் டி வர்க்கீசும் நண்பர்கள்.
நேற்று காலையில் மார்த்தாண்டத்தில் இருந்து ஆட்லின் ஜிஜினும், ஜீசன் டி வர்க்கீசும் மோட்டார் சைக்கிளில் கன்னியாகுமரி நோக்கி சென்றனர். வில்லுக்குறி தோட்டியோடு அருகே வந்தபோது, சாக்கியன்கோடு பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவர் டெம்போ ஓட்டி வந்தார். இந்தநிலையில் திடீரென மோட்டார் சைக்கிளும், டெம்போவும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
2 பேர் பலி
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் படுகாயமடைந்த ஆட்லின் ஜிஜின் அதே இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.
உயிருக்காக போராடிய ஜீசன் டி வர்க்கீசை இரணியல் போலீசார் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கு சிகிச்சை பலனின்றி ஜீசன் டி வர்க்கீசும் பரிதாபமாக இறந்தார்.
போக்குவரத்து பாதிப்பு
விபத்தின் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனே தக்கலை நெடுஞ்சாலைத்துறை ரோந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போக்குவரத்தை சரி செய்தனர்.
இதற்கிடையே விபத்தில் பலியான 2 பேருடைய உடல்களும் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி பிணவறைக்கு கொண்டு செல்லப்பட்டது. மேலும் இதுதொடர்பாக இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். டெம்போ-மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் மாணவர் உள்பட 2 பேர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.