சேலம் மத்திய கூட்டுறவு வங்கியில் வருமானவரி அதிகாரிகள் அதிரடி சோதனை

சேலம்,
சேலம் மத்திய கூட்டுறவு வங்கியில் நேற்று மாலை வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர்.
வருமானவரி அதிகாரிகள் சோதனை
சேலம் செரிரோட்டில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைமை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த வங்கிக்கு நேற்று மாலை 6 மணியளவில் 2 கார்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் 18 பேர் திடீரென வந்தனர். இதையடுத்து அவர்கள், வங்கி அலுவலகத்திற்குள் சென்றதும், அவர்கள் வருமானவரித்துறை அலுவலகத்தில் இருந்து வந்திருப்பதாக தெரிவித்து, அங்கு பணியில் இருந்த அதிகாரிகளையும், பணியாளர்களையும் அவர்களது இருக்கையில் அப்படியே இருக்குமாறும், யாரும் வெளியில் செல்லக்கூடாது என்றும் அறிவுறுத்தினர்.
பின்னர், வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக தங்களது சோதனையை தொடங்கினர். வங்கியின் வரவு-செலவு ஆவணங்கள், பணம் பரிவர்த்தனை குறித்த ஆவணங்கள் உள்ளிட்ட விவரங்களை அதிகாரிகள் கேட்டு அதை சரிபார்த்தனர். இந்த சோதனையில், சென்னை, திருச்சி மற்றும் சேலத்தை சேர்ந்த வருமான வரித்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர்.
குறிப்பாக கடந்த நவம்பர் 8-ந் தேதி முதல் தற்போது வரை பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்த விவரங்கள் குறித்து விசாரணை நடத்தினர். வங்கியின் முன்பக்க வாசல் அறைகளை பூட்டிக்கொண்டு வங்கியில் இருந்த அனைத்து அறைகளிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர். வெளியில் இருந்து யாரும் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை.
வங்கி ஆவணங்கள் சரிபார்ப்பு
இதையடுத்து சரியாக இரவு 8 மணியளவில் வருமான வரித்துறை அதிகாரிகள் 6 பேர் வங்கியில் இருந்து வெளியே வந்தனர். அவர்களிடம் வங்கி தொடர்பாக சோதனை நடக்கிறதா? அல்லது வேறு ஏதேனும் காரணமாக இந்த சோதனை நடக்கிறதா? என்று கேட்டபோது, சென்னையில் இருந்து உயர் அதிகாரிகள் குழுவினர் வந்து சோதனை நடத்துகின்றனர்? இது தொடர்பாக நாங்கள் எதுவும் சொல்லக்கூடாது என்று தெரிவித்தனர்.
இந்தநிலையில், சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் கட்டுப்பாட்டில் சேலம், நாமக்கல் மாவட்டங்களில் மொத்தம் 64 இடங்களில் கிளைகள் உள்ளன. இந்த கிளை வங்கிகளில் பணியாற்றும் அதிகாரிகள் அனைவரும் தங்களது வங்கிகளில் உள்ள வரவு-செலவு, பணம் பரிவர்த்தனை போன்ற விவரங்கள் அடங்கிய ஆவணங்கள் அனைத்தையும் உடனடியாக தலைமை அலுவலகத்திற்கு கொண்டு வருமாறு வங்கியில் இருந்த அதிகாரிகளிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த தகவல் அனைத்து வங்கி கிளை மேலாளர்களுக்கும் உடனடியாக தெரிவிக்கப்பட்டது.
அதன்படி சேலம் மாநகரில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கியின் கிளை அலுவலகங்களில் இருந்து அதன் அதிகாரிகள் சிலர் வங்கி சம்பந்தப்பட்ட ஆவணங்களுடன் மத்திய கூட்டுறவு வங்கிக்கு வந்தனர். பின்னர், அவர்கள் கொண்டு வந்த ஆவணங்களையும் வருமான வரித்துறை அதிகாரிகள் சரிபார்த்தனர்.
இந்த வருமான வரித்துறை சோதனை இரவு வரை நீடித்தது. ஆனால் முக்கிய ஆவணங்கள் எதுவும் சிக்கவில்லை என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது. சேலம் மத்திய கூட்டுறவு வங்கியில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தியது சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.