பள்ளிகொண்டா அருகே சொகுசு பஸ் கவிழ்ந்து 6 பேர் காயம்

கர்நாடக மாநிலம் பெங்களூரு மடவாளத்தில் இருந்து தனியார் சொகுசு பஸ் ஒன்று 30 பயணிகளை ஏற்றிக்கொண்டு நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு சென்னைக்கு சென்று கொண்டிருந்தது. நேற்று அதிகாலை 4 மணிக்கு பள்ளிகொண்டா அருகே சின்னகோவிந்தம்பாடி தேசிய நெடுஞ்சாலையில் வரும்போது

Update: 2016-12-21 20:30 GMT

அணைக்கட்டு,

கர்நாடக மாநிலம் பெங்களூரு மடவாளத்தில் இருந்து தனியார் சொகுசு பஸ் ஒன்று 30 பயணிகளை ஏற்றிக்கொண்டு நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு சென்னைக்கு சென்று கொண்டிருந்தது. நேற்று அதிகாலை 4 மணிக்கு பள்ளிகொண்டா அருகே சின்னகோவிந்தம்பாடி தேசிய நெடுஞ்சாலையில் வரும்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையோரத்தில் கவிழ்ந்தது. இதில் பஸ்சில் பயணம் செய்த 6 பேருக்கு மட்டும் காயங்கள் ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் பள்ளிகொண்டா போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர்கள் கவிதா, கலைச்செல்வன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து காயம் அடைந்த 6 பேரை அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மற்ற பயணிகளை வேறொரு பஸ்சில் அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து பள்ளிகொண்டா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


மேலும் செய்திகள்