தியாகராயநகரில் உள்ள துணிக்கடை ஊழியர் தண்ணீர் தொட்டிக்குள் இறங்கியபோது விஷவாயு தாக்கி சாவு

சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் துணிக்கடையின் ஊழியர் தண்ணீர் தொட்டிக்குள் இறங்கியபோது விஷவாயு தாக்கி உயிரிழந்தார்.

Update: 2016-12-20 23:20 GMT
சென்னை,

சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் துணிக்கடையின் ஊழியர் தண்ணீர் தொட்டிக்குள் இறங்கியபோது விஷவாயு தாக்கி உயிரிழந்தார்.

மூச்சுத்திணறல்

சென்னை தியாகராயநகரில் உள்ள ராமச்சந்திரா தெருவில் பிரபல துணிக்கடையின் ஊழியர்கள் தங்கும் விடுதி உள்ளது. இந்த விடுதியில் நேற்று முன்தினம் இரவு தண்ணீர் வராததால் ஊழியர் ஒருவர் குளிப்பதற்காக தரை தளத்தில் உள்ள 20 அடி ஆழமுள்ள தண்ணீர் தொட்டியில் தண்ணீர் இறைப்பதற்காக தொட்டியின் உள்ளே உள்ள படிக்கட்டில் இறங்கியுள்ளார்.

அப்போது திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு தண்ணீருக்குள் மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. இதை பார்த்த சக ஊழியர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.

விஷவாயு

இதுகுறித்து மாம்பலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், தண்ணீர் தொட்டிக்குள் மயங்கி விழுந்த நபர் அசாம் மாநிலத்தை சேர்ந்த பிஜு (வயது 24) என்பது தெரியவந்தது.

இவர் பல நாட்களாக திறக்கப்படாத தண்ணீர் தொட்டியை திறந்து தண்ணீர் இறைக்க முயன்றபோது அந்த தொட்டியில் உள்ள விஷவாயு தாக்கி மயங்கி தண்ணீருக்குள் விழுந்ததாக கூறப்படுகிறது. 

மேலும் செய்திகள்