பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையின் போது உயிர் இழந்த பிரபல இளம் நடிகை

இளம் நடிகை உடல் எடை மற்றும் கொழுப்பு குறைப்பு சிகிச்சைக்காக பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொள்ள பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார்

Update: 2022-05-17 08:16 GMT
பெங்களூரு

கன்னட நடிகை நடிகை சேத்தனா ராஜ் (வயது 21) கீதா, தொராசனி போன்ற தொலைக்காட்சி தொடர்கள் மூலம் சேத்தனா புகழ்பெற்றார்.

உடல் எடைமற்றும் கொழுப்பு குறைப்பு சிகிச்சைக்காக பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொள்ள பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில்  நேற்று அனுமதிக்கப்பட்டார் காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகைக்கு ‘கொழுப்பு அகற்றும் ’ அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. மாலையில் அவரது நுரையீரலில் நீர் தேங்கத் தொடங்கியதால் நடிகை உடல்நிலையில் திடீர் என பின்னடைவு ஏற்பட்டது.

 நடிகை பிளாஸ்டிக் சர்ஜரி சிகிச்சை குறித்து தனது பெற்றோருக்கு தெரிவிக்கவில்லை என்றும், தனது நண்பர்களுடன் மருத்துவமனைக்குச் சென்றதாகவும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சேத்தனாவின் பெற்றோர் தங்கள் மகள் மரணத்திற்கு டாக்டரின்  அலட்சியமே காரணம் என்று புகார் கூறி உள்ளனர்.

சேதனாவின் உடல் தற்போது மருத்துவமனையில் வைக்கபட்டு உள்ளது, பிரேத பரிசோதனைக்காக ராமையா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகிறது. மருத்துவமனைக்கு எதிராக போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்