"நாமெல்லாம் சண்டை போடாம அமைதியா இருந்தா.." - வைரலாகும் நயன்தாரா படத்தின் டீசர்..!

நடிகை நயன்தாரா நடித்துள்ள 'ஓ2' திரைப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.

Update: 2022-05-16 06:47 GMT
சென்னை,

நடிகை நயன்தாரா தற்போது 'ஓ2' என்ற கதாநாயகியை மையமாகக் கொண்ட திரைப்படம் ஒன்றில் நடித்துள்ளார். இயக்குனர் வெங்கட் பிரபுவின் உதவி இயக்குனர்களில் ஒருவரான ஜி.கே. விக்னேஷ் என்பவர் இந்த திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.

இந்த திரைப்படத்தை டீரிம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். தமிழ் ஏ அழகன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த திரைப்படம் நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் விரைவில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது. விபத்தில் சிக்கும் பேருந்து ஒன்றில் 8 வயது மகனுடன் மாட்டிக்கொள்ளும் தாய், நுரையீரல் பிரச்சினைக்காக எப்போதும் தன் மகனிடம் இருக்கும் ஆக்சிஜன் சிலிண்டரை பேருந்தில் சக பயணிகள் குறிவைக்க தன் மகனை அவர்களிடமிருந்து எவ்வாறு காப்பாற்றுகிறாள் என்பதைப் பரபரப்பாகச் சொல்லும் படமாக 'ஓ2' உருவாகியுள்ளது.

தமிழ்நாடு, கேரளா இணையும் மலைப்பகுதியில் இக்கதை நடப்பதாக அமைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் பார்வதி என்ற அம்மா கதாபாத்திரத்தில் நயன்தாரா நடித்துள்ளார். அவரது மகனாக பிரபல யூடியூப் குழந்தை நட்சத்திரம் ரித்விக் நடித்துள்ளார். இந்த டீசர் தற்போது வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்