பரியேறும் பெருமாள்' தங்கராசுக்கு புதிய வீடு - திறந்து வைத்தார் மாரி செல்வராஜ்

புதிய வீட்டை நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்னு மற்றும் இயக்குனார் மாரி செல்வராஜ் ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்துவைத்தனர்.

Update: 2022-04-14 14:49 GMT
நெல்லை,

பரியேறும் பெருமாள் படத்தில் நடித்தவரும், நாட்டுப்புற கலைஞருமான தங்கராசுவின் புதிய வீட்டை இயக்குனர் மாரி செல்வராஜ் திறந்துவைத்தார். 

பரியேறும் பெருமாள் திரைப்படத்தில் கதாநாயகனுக்கு அப்பாவாக நடித்து புகழ்பெற்ற தங்கராசுவின் வறுமை நிலையை கருத்தில் கொண்டு நெல்லை மாவட்ட நிர்வாகம் மற்றும் முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் புதிய வீடு ஒன்றை கட்டுக்கொடுத்துள்ளது. 

இந்த புதிய வீட்டை நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்னு மற்றும் இயக்குனார் மாரி செல்வராஜ் ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்துவைத்தனர். இதுபோன்ற நலிந்த கலைஞர்களுக்கு உதவ வேண்டும் என்று இயக்குனர் மாரி செல்வராஜ் கேட்டுக்கொண்டார். 

மேலும் செய்திகள்