நடிகையை கடத்தி பாலியல் கொடுமை: காவ்யா மாதவன் உடந்தை...! வெளியானது ஆடியோ ஆதாரம்.!
நடிகையை கடத்தி பாலியல் கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நடைகை காவ்யா மாதவன் உடந்தையாக இருந்தது தொடரபான ஆடியோ ஆதாரம் வெளியானது
திருவனந்தபுரம்
கேரளாவில் பிரபல நடிகை காரில் கடத்தப்பட்டு பாலியல் அத்துமீறலுக்கு உள்ளாக்கப்பட்ட வழக்கில் நடிகர் திலீபின் மனைவிநடிகை காவ்யா மாதவனுக்கு தொடர்பு உள்ளது என்பதை குறிக்கும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்ப்படுத்தி உள்ளது.
2017ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த வழக்கில் 10 பேர் குற்றம் சாட்டப்பட்ட நிலையில், 7 பேரை போலீஸார் கைது செய்தனர். இதையடுத்து நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
நடிகர் திலீப்பின் மனைவியும், மலையாள நடிகையுமான காவ்யா மாதவன், 2017ஆம் ஆண்டு நடிகை தாக்கப்பட்ட வழக்கு தொடர்பாக விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.காவ்யா ஏப்ரல் 11 திங்கட்கிழமை விசாரணைக்கு ஆஜராகுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளார்.
கேரளாவில் பிரபல திரைப்பட நடிகை பாலியல் அத்துமீறல் வழக்கில், நடிகர் திலீப்பின் சகோதரி கணவன் சூரஜ் என்பவரும் அவரது நண்பர் சரத்தும் உரையாடும் 3 செல்போன் உரையாடல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
அந்த ஆடியோக்கள் மூலம், பாலியல் அத்துமீறல் சம்பவத்தில் நடிகை காவ்யா மாதவனின் தூண்டுதல் இருப்பது அம்பலமாகி உள்ளது.