'வலிமை' சாதனையை ஒரே நாளில் முறியடித்த 'பீஸ்ட்'
இந்திய சினிமாவின் ஒட்டுமொத்த ரெக்கார்டுகளையும் பீஸ்ட் பட ட்ரைலர் முறியடித்துள்ளது.
சென்னை,
இந்திய சினிமாவின் ஒட்டுமொத்த ரெக்கார்டுகளையும் பீஸ்ட் பட ட்ரைலர் முறியடித்துள்ளது.
பீஸ்ட் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி இணையத்தை அதிர வைத்து வருகிறது. ஒரு புறம் விஜய் ரசிகர்கள் ஓசியில் ட்ரெய்லர் பார்க்க சென்ற தியேட்டரின் இருக்கைகள், கண்ணாடிகளை உடைக்கிறார்கள், மறுபுறம் விஜயின் பீஸ்ட் ட்ரெய்லர் இந்திய சினிமாவின் ஒட்டுமொத்த சாதனைகளை ஒவ்வொன்றாக உடைத்து வருகிறது.
ஏற்கனவே, வலிமை ட்ரைலரின் மொத்த ரெக்கார்டுகளையும் பீஸ்ட் ஒரு நாளுக்குள் முறியடித்து சாதனை படைத்துள்ளது. இதனிடையே தற்போது வரை யூடியுபில் 2.4 மில்லியன் லைக்ஸ் மற்றும் 33 மில்லியன் பார்வைகளை பீஸ்ட் ட்ரெய்லர் கடந்துள்ளது.