கார் விபத்தில் சிக்கிய பிரபல பாலிவுட் நடிகை மருத்துவமனையில் அனுமதி
பிரபல பாலிவுட் நடிகை சென்ற கார் மும்பையில் நேற்று விபத்துக்குள்ளானது.
மும்பை,
பாலிவுட் உலகின் முன்னனி நடிகைகளுள் ஒருவர் மலைகா அரோரா. இவர் நேற்று புனேயில் நடந்த பேஷன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு விட்டு தனது ரேஞ்ச் ரோவர் காரில் மும்பை நோக்கி வந்து கொண்டிருந்தார்.
கார் மும்பையில் இருந்து புனே செல்லும் நெடுஞ்சாலையில் சென்றபோது மலைகா அரோரா காருக்கு முன்னாள் சென்ற சுற்றுலா வாகனம் ஒன்று திடீரென பிரேக் போட்டு நிறுத்தப்பட்டது.
இதனால் மலைகா காரும், அவரது காருக்கு பின்னால் வந்த மற்றொரு சுற்றுலா வாகனமும் ஒன்றோடொன்று மோதிக்கொண்டன. இதில் மூன்று வாகனங்களில் இருந்தவர்கள் காயம் அடைந்தனர். மலைகா அரோராவிற்கு லேசான காயம் ஏற்பட்டது.
விபத்து குறித்து கேள்விப்பட்டதும் நெடுஞ்சாலை பிரிவு போலீஸார் விரைந்து செயல்பட்டு காயம் அடைந்தவர்களை மருத்துவமனையில் சேர்த்தனர். மலைகா அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு லேசான காயமடைந்திருப்பதை அவர் சகோதரி அம்ரிதா அரோராவும் உறுதி செய்துள்ளார். மேலும் அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும், தொடர்ந்து கண்காணிப்பில் வைக்கப்பட்டிருப்பதாகவும் அம்ரிதா தெரிவித்தார்.
இது குறித்து கொபோலி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.