இணையத்தில் வைரலாகும் அஜித் எழுதிய "நன்றி கடிதம்"
நடிகர் அஜித் எழுதிய "நன்றி கடிதம்" தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
திருவனந்தபுரம்,
நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து மீண்டும் இயக்குனர் எச். வினோத், நடிகர் அஜித் நடிக்கும் 61-வது படத்தை இயக்குகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு கேரளா சென்றிருந்த நடிகர் அஜித், அங்கு ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக் கொண்டார்.
இந்த நிலையில் கேரளாவில் தனக்கு ஆயுர்வேத சிகிச்சை அளித்த மருத்துவர்கள் உன்னி கிருஷ்ணன் மற்றும் கிருஷ்ண தாஸ் இருவருக்கும் நன்றி தெரிவித்து, நடிகர் அஜித் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். தற்போது, அந்த கடிதம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.