18 ஆண்டுகளுக்கு பின் பாலா இயக்கத்தில் நடிக்கும் சூர்யா
நீண்ட ஆண்டுகளுக்கு பின் இயக்குநர் பாலாவின் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக நடிகர் சூர்யா நெகிழ்வுடன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
பாலாவின் இயக்கத்தில் சூர்யா நடித்த நந்தா,பிதாமகன் ஆகிய படங்கள் சூர்யாவிற்கு மிகப்பெரிய வெற்றிப்படங்களாக அமைந்தது.
இந்த நிலையில், 18 ஆண்டுகளுக்கு பிறகு பாலாவின் இயக்கத்தில் தனது 41 ஆவது படத்தில் சூர்யா நடக்க உள்ளார். இதற்கான படப்பிடிப்பு தற்போது தொடங்கியுள்ள நிலையில், பாலாவின் இயக்கத்தில் நடிக்க தான் காத்திருந்ததாக சூர்யா தெரிவித்துள்ளார்.
மேலும், படப்பிடிப்பு தொடர்பான புகைப்படங்களையும் பகிர்ந்து அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.