94வது ஆஸ்கர் : 24 பிரிவுகளுக்கான விருதுகள் முழு விவரம்

ஆஸ்கர் விருது விழா கடந்த 4 வருடங்களாக தொகுப்பாளர்கள் இன்றி நடத்தப்பட்டு வந்த நிலையில், இந்த ஆண்டு வாண்டா சைக்ஸ் , ஏமி ஸ்கூமர் , ரெஜினா ஹால் ஆகியோர் தொகுத்து வழங்கினர்

Update: 2022-03-28 08:00 GMT
லாஸ் ஏஞ்சல்ஸ்

நடப்பாண்டிற்கான 94 வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது.

 உக்ரைனுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் பிரபலங்கள் நீல நிற பேட்ச் அணிந்து வந்தனர்.

மொத்தம் 24 பிரிவுகளுக்கு ஆஸ்கர் விருதுகள் வழங்கப்பட்டன.

இந்த ஆண்டு இந்த ஆண்டு வாண்டா சைக்ஸ், ஏமி ஸ்கூமர், ரெஜினா ஹால் ஆகியோர் தொகுத்து வழங்கினர்.

இதில் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது ஹாலிவுட் நடிகர்  வில் ஸ்மித்திற்கு முதன்முறையாக கிடைத்துள்ளது. 'கிங் ரிச்சர்ட்' திரைப்படத்தில் நடித்ததற்காக இந்த விருதை அவர் வென்றுள்ளார்.தொகுப்பாளரும் நகைச்சுவை நடிகருமான கிறிஸ் ராக், சிறந்த நடிகருக்கான பரிந்துரைக்கப்பட்ட வில் ஸ்மித்தின் மனைவியான நடிகை ஜடா பிங்கெட் ஸ்மித்தைப் பற்றி நகைச்சுவையாகப் பேசினார்.

விருதை வழங்கும்போது, பிங்கெட் ஸ்மித்தின் மொட்டையடிக்கப்பட்ட தலையைப் பற்றி ராக் கூறி கிண்டல் செய்தார். ஆரம்பத்தில் சிரித்துக்கொண்டிருந்த வில் ஸ்மித், ஒரு கட்டத்தில் பொறுத்துக்கொள்ள முடியாமல் மேடைக்கு ஏறி வந்தார். அப்போது, தொகுப்பாளர் கிறிஸ் ராக்கின் கன்னத்தில் ஓங்கி அறைந்து விட்டு கீழே இறங்கிச் சென்றார். இந்த காட்சியை சமூகவலைதளங்களில் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

சிறந்த நடிகைக்கான விருது ஜெசிகா சாஸ்டைனுக்கு வழங்கப்பட்டுள்ளது. 
The Eyes of Tammy Faye திரைப்படத்தில் நடித்ததற்காக இந்த விருது கிடைத்துள்ளது.

'தி பவர் ஆஃப் தி டாக்' திரைப்படத்தை இயக்கியதற்காக ஜேன் கேம்பியன் சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கார் விருதை வென்றார்.

கோடா சிறந்த திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதை தட்டிச் சென்றுள்ளது.

சிறந்த ஆடை வடிவமைப்புக்கான ஆஸ்கர் விருதை ஜென்னி பீவன் வென்றுள்ளார். 

டெனிஸ் வில்லெனு இயக்கிய அமெரிக்க திரைப்படமான "டியூன்" திரைப்படம், சிறந்த விஷுவல் எபெக்ட்ஸ், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு, சிறந்த பின்னணி இசை, சிறந்த படத்தொகுப்பு, சிறந்த ஒலி ஆகிய 6 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகளை தட்டிச் சென்றுள்ளது.

சிறந்த அனிமேஷன் திரைப்படத்திற்கான ஆஸ்கார் விருது என்கான்டோ திரைப்படத்திற்கு கிடைத்துள்ளது. 

சிறந்த துணை நடிகருக்கான விருதினை ‛டிராய் கோட்சர்' பெற்றார்.

சிறந்த துணை நடிகை விருதினை ‛அரியானா டிபோஸ்' வென்றார். 

சிறந்த பாடலுக்கானா விருதை ஜேமஸ்பாண்ட் படமான  "நோ டைம் டூ டை " க்குகிடைத்துள்ளது.

ஜப்பானிய திரைப்படமான "டிரைவ் மை கார்" சிறந்த சர்வதேச திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதை வென்றது.

2022 ஆஸ்கர் விருது பெற்றவர்களின் முழு பட்டியல்: 

சிறந்த திரைப்படம் - கோடா

கோடா படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய மாற்றுத்திறனாளி நடிகர் டிராய் கோட்சர் சிறந்த துணை நடிகருக்கான விருதை வென்று அசத்தினார். வாய் பேச முடியாதவ மற்றும் காது கேளாத நடிகரான டிராய் கோட்சர் சைகை மொழியில் ஆஸ்கர் விருதை வென்றுவிட்டு பேச அவருக்கு பதில் அருகே ஒரு நபர் அவருக்கு குரல் கொடுக்க ஒட்டுமொத்த அரங்கமே டிராய் கோட்சரை கைதட்டி பாராட்டியது.

சிறந்த நடிகர் - வில் ஸ்மித் (திரைப்படம் - கிங் ரிச்சர்ட்)

1992ம் ஆண்டு வெளியான Where the Days Take You படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் வில் ஸ்மித். 1995ம் ஆண்டு வெளியான பேட் பாய்ஸ் திரைப்படம் சர்வதேச அளவில் இவருக்கு ரசிகர்களை பெற்றுத் தந்தது. அதனை தொடர்ந்து வெளியான இண்டிபென்டன்ஸ் டே, மென் இன் பிளாக் படங்கள் மூலம் உலகளவில் ஆக்‌ஷன் சூப்பர்ஸ்டாராக மாறினார் வில் ஸ்மித்.

செரினா வில்லியம்ஸ் மற்றும் வீனஸ் வில்லியம்ஸின் தந்தை ரிச்சர்ட் வில்லியம்ஸின் நிஜ வாழ்க்கை வரலாற்றை தழுவி உருவாக்கப்பட்ட கிங் ரிச்சர்ட் படத்தில் ரிச்சர்ட் வில்லியம்ஸாக நடித்த வில் ஸ்மித்துக்கு சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது 94வது ஆஸ்கர் விருது விழாவில் வழங்கப்பட்டுள்ளது.

2002ம் ஆண்டு அலி திரைப்படத்திற்கும் 2007ம் ஆண்டு பர்சூட் ஆஃப் ஹேப்பினஸ் படத்திற்காகவும் நாமினேட் செய்யப்பட்ட வில் ஸ்மித்துக்கு விருது கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 2022ம் ஆண்டு கிங் ரிச்சர்ட் படத்தின் மூலம் அவரது ஆஸ்கர் கனவு நிறைவேறியுள்ளது.ஆஸ்கர் விருதை பெற்ற வில் ஸ்மித் மேடையில் கண் கலங்கி அழுதபடியே பேசிய காட்சிகள் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

சிறந்த நடிகை - ஜெசிகா சாஸ்டெய்ன் (திரைப்படம் - தி ஐஸ் ஆஃப் டாமி ஃபயே)

ஆவணப்படம்: "சம்மர் ஆப் சோல்” (அல்லது, வென் தி ரிவொலியுசன் குட் நாட் பி டெலிவைஸ்ட்)

பாடல்: "நோ டைம் டு டை" "நோ டைம் டு டை", (இசை மற்றும் பாடல் வரிகள் பில்லி எலிஷ் மற்றும் ஃபின்னியாஸ் ஓ'கானல்)

சிறந்த இயக்குனர் - ஜேன் கேம்பியன் (திரைப்படம் - தி பவர் ஆஃப் டாக்)

கடந்த ஆண்டு நோமேட் லேண்ட் திரைப்படத்திற்காக பெண் இயக்குநர் க்ளோ சாஹோ சிறந்த இயக்குநருக்கான விருது வென்ற நிலையில், இந்த ஆண்டு தி பவர் ஆஃப் தி டாக் படத்தை இயக்கிய பெண் இயக்குநர் ஜேன் கேம்பியன் ஆஸ்கர் விருது வென்றார். 

சிறந்த துணை நடிகர் - டிராய் காஸ்டர் (திரைப்படம் - கோடா)

சிறந்த சர்வதேச திரைப்படம் - டிரைவ் மை கார்

ஆடை வடிவமைப்பு: "க்ருயெல்லா"

.சிறந்த திரைக்கதை - சர் கென்னித் ப்ரானா (திரைப்படம் - பில்ஃபெஸ்ட்)

சிறந்த தழுவல் திரைக்கதை - சியான் ஹேதர் (திரைப்படம்- கோடா)

சிறந்த துணை நடிகை - ஹரியானா டிபோஸ் (திரைப்படம் - வெஸ்ட் சைட் ஸ்டோரி)

ஒளிப்பதிவு - "டூன்"

விஷுவல் எஃபெக்ட்ஸ் - "டூன்"

சிறந்த அனிமேஷன் திரைப்படம் - என்காண்டோ

ஒலி - "டூன்"

ஆவணப்படம் (குறுகிய பொருள்) - "தி குயின் ஆப் பாஸ்கட்பால்"

சிறந்த அனிமேஷன் குறும்படம் - "தி விண்ட்ஷீல்ட் வைப்பர்"

சிறந்த லைவ் ஆக்சன் குறும்படம் - "தி லாங் குட்பை" 

இந்த  படத்திற்காக அதன் துணை இயக்குனரும், நடிகருமான ரிஸ் அகமத்திற்கு வழங்கப்பட்டது.

விருதை பெற்ற ரிஸ் அகமத் , “ இதுபோன்ற பிளவுபட்ட காலத்தில், ’இவர்கள்’மற்றும் ‘அவர்கள்’இல்லை என்பதை நினைவூட்டுவதே கதையின் பங்கு என்று நாங்கள் நம்புகிறோம். இங்கு ‘நாம்’தான் இருக்கிறது” என்று பேசினார்.

குறும்பட பிரிவில், ஆஸ்கர் விருது பெறும் முதல் முஸ்லிம், ரிஸ் அகமத் என்று கூறப்படுகிறது.

பிரிட்டீஸ் - பாகிஸ்தானியரான ரிஸ் அகமத் கடந்த ஆண்டும் ’Sound of Metal’ படத்திற்காக சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் பட்டியலில் இடம்பெற்றிருந்தார். இந்த நிலையில் அவர் எழுதி, நடித்த ’The Long Goodbye ’படத்திற்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டுள்ளது.

இசை (அசல் ஸ்கோர்) - "டூன்"

சிறந்த படத்தொகுப்பு - ஜோ வாக்கர் (திரைப்படம் - டூன்)

தயாரிப்பு வடிவமைப்பு - "டூன்"

ஒப்பனை மற்றும் சிகை அலங்காரம் - "தி ஐஸ் ஆஃப் டாமி ஃபயே"

மேலும் செய்திகள்