விஜய் நடித்துள்ள 'பீஸ்ட்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

பீஸ்ட் திரைப்படம் திரையரங்கில் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-03-22 06:18 GMT
சென்னை 
 
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய், இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும், யோகி பாபு, செல்வராகவன் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படத்தில் இருந்து முதல் பாடலான 'அரபிக்குத்து' பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று,யூடியூப்பில் சாதனையும் படைத்தது . 

அதனை தொடர்ந்து அனிருத் இசையில் நடிகர் விஜய் பாடியிருக்கும் 'ஜாலியோ ஜிம்கானா' பாடல் வெளியாகி வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து நேற்று பீஸ்ட் படத்தின் தணிக்கை சான்றிதழை விஜய் ரசிகர்கள் அதிகளவு தேடியதில் சிபிஎப்சி இணையதளம் முடங்கியது.

படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறாது என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் படம் எப்போது வெளியாகும் என விஜய் ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்து இருந்தனர்.

இந்த நிலையில் பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் 13ம் தேதி திரையரங்கில் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் இன்று அறிவித்துள்ளது. இந்த அதிகாரபூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. 

மேலும் செய்திகள்