நடிகர் விஜய் பாடிய'ஜாலியோ ஜிம்கானா'பாடல் வெளியானது

நடிகர் விஜய் பாடியிருக்கும் 'ஜாலியோ ஜிம்கானா பாடல் தற்போது வெளியாகியுள்ளது .

Update: 2022-03-19 13:10 GMT
சென்னை,

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர நடிகராக திகழும் விஜய் 'மாஸ்டர்' திரைப்படத்திற்கு பிறகு நடித்துள்ள திரைப்படம் 'பீஸ்ட்'. இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இந்த திரைப்படத்தை இயக்கி உள்ளார். இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே  நடித்துள்ளார் .இந்த திரைப்படம் வருகிற ஏப்ரல் மாதத்தில் வெளியாகவுள்ளது .

 இந்த திரைப்படத்தில் இருந்து முதல் பாடலான 'அரபிக்குத்து' பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று,யூடியூப்பில் .சாதனையும் படைத்தது . 

இந்த நிலையில், அனிருத்  இசையில் ,நடிகர் விஜய் பாடியிருக்கும் 'ஜாலியோ ஜிம்கானா' பாடல்  தற்போது வெளியாகியுள்ளது .

மேலும் செய்திகள்