'தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம்: அடுத்தடுத்து வரிச்சலுகை அளிக்கும் மாநிலங்கள்

ஏற்கெனவே இரு மாநிலங்கள் வரிச்சலுகை அளித்த நிலையில், தற்போது மேலும் நான்கு மாநிலங்கள் வரிச்சலுகை அளித்துள்ளது.

Update: 2022-03-14 14:18 GMT
கோப்புப்படம்
போபால்,

காஷ்மீரில் 1990-ம் ஆண்டு வாக்கில் இந்து மதத்தினரை குறிவைத்து பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தபப்ட்டது. இந்து மதத்தை சேர்ந்த பண்டிட்கள் காஷ்மீரை விட்டு வெளியேற வேண்டும் என பயங்கரவாதிகள் பகிரங்க எச்சரிக்கை விடுத்தனர். அதேபோல், காஷ்மீரில் இஸ்லாமிய மத வழிபாட்டு தளத்தில் அமைக்கப்பட்டிருந்த ஒலிப்பெருக்கு மூலமாகவும் எச்சரிக்கை விடுக்கபட்டது.

இந்த பயங்கரவாத தாக்குதல்கள், எச்சரிக்கையை தொடர்ந்து காஷ்மீரில் இருந்து லட்சக்கணக்கான பண்டிட்கள் தங்கள் வாழ்விடங்களை விட்டு வெளியேறி நாட்டின் பல்வேறு இடங்களில் அகதிகளாக தஞ்சமடைந்தனர்.   

இதற்கிடையில், காஷ்மீரில் 1990-ம் ஆண்டுவாக்கில் நடைபெற்ற பண்டிட்கள் மீதான தாக்குதல்கள், பண்டிட்கள் காஷ்மீரில் இருந்து வெளியேறிய சம்பவங்கள் இந்தியில் திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது. 

’தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படத்தை விவேக் ரஞ்சன் அக்னிகொத்ரி இயக்கியுள்ளார். அனுபம் கெர், பல்லவி ஜோஷ், பாஷா சும்ப்லி, தர்ஷன் குமார் உள்ளிட்டோ இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் கடந்த 11 ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

இந்த திரைப்படத்திற்கு ஏற்கெனவே அரியானா மற்றும் மத்திய பிரதேச மாநிலங்கள் வரிச்சலுகை வழங்கி அறிவித்தது. இந்த நிலையில், தற்போது திரிபுரா, கோவா, கர்நாடகா, உத்தரகாண்ட்  ஆகிய மாநிலங்களும் இந்த திரைப்படத்திற்கு வரிச்சலுகை வழங்கியுள்ளது.

மேலும், ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ பன்வர் லால் சர்மா, இந்த திரைப்படத்திற்கு வரிச்சலுகை வழங்கக்கோரி முதல் மந்திரிக்கு கடிதம் எழுதவுள்ளதாக தெரிவித்தார்.    

மேலும் செய்திகள்