'கே.ஜி.எப்-2' திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு தேதி அறிவிப்பு ..!
'கே.ஜி.எப்-2' திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது .
கே.ஜி.எப். படத்தின் முதல் பாகம் கடந்த 2018-ம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான நிலையில், தற்போது அப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி உள்ளது. பிரசாந்த் நீல் இயக்கத்தில் 'யாஷ்' ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில், அவருக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். மேலும் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அதீரா எனும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
பின்னர் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்ட இப்படம் இந்த ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி இப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் 'கே.ஜி.எப் - 2 'திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது .அதன்படி 'கே.ஜி.எப் - 2 ' டிரைலர் மார்ச் 27ம் தேதி மாலை 6.40 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது
There is always a thunder before the storm!#KGFChapter2 Trailer on March 27th at 6:40 pm.
— Prashanth Neel (@prashanth_neel) March 3, 2022
Stay Tuned: https://t.co/grk8SQMTJe@Thenameisyash@VKiragandur@hombalefilms@HombaleGroup@duttsanjay@TandonRaveena@SrinidhiShetty7@bhuvangowda84@RaviBasrur
#KGF2TrailerOnMar27pic.twitter.com/CYcWx9vK1j