திரையுலகில் 12 ஆண்டுகளை நிறைவு செய்த சமந்தா..!

சமந்தா கதாநாயகியாக அறிமுகமாகி இன்றுடன் 12 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

Update: 2022-02-26 10:12 GMT
சென்னை,

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் சமந்தா. கடந்த 2010-ம் ஆண்டு இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் 'விண்ணைத் தாண்டி வருவாயா' திரைப்படத்தை தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் இயக்கியிருந்தார். அதில் தமிழில் சிம்பு மற்றும் திரிஷா இருவரும் நடித்திருந்தனர். தெலுங்கில் அந்த திரைப்படம் 'ஏ மாயா சேசவே' என்ற பெயரில் வெளியானது. அதில் நாகசைதன்யா மற்றும் சமந்தா இணைந்து நடித்திருந்தனர். 

பிப்ரவரி 26-ந்தேதி 2010-ம் ஆண்டு வெளியான 'ஏ மாயா சேசவே' திரைப்படம் மூலம் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமான சமந்தா இன்றுடன் சினிமாவில் அறிமுகமாகி 12 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதையடுத்து '12 Years of Samantha' என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் சமந்தாவிற்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகை சமந்தா திரையுலகில் 12 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது குறித்து தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் அவர், 'இன்று நான் திரையுலகில் 12-வது ஆண்டை நிறைவு செய்கிறேன். 

இந்த 12 ஆண்டு கால நினைவுகளும் லைட்ஸ், கேமரா, ஆக்‌ஷன் என்று ஒப்பற்ற தருணங்களைச் சுற்றி உள்ளன. இந்த ஆசீர்வதிக்கப்பட்ட பயணம் மற்றும் உலகின் சிறந்த, நேர்மையான ரசிகர்களை பெற்றதற்காக நான் நன்றியுடன் இருக்கிறேன்!' என்று தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்