இன்ஸ்டாகிராம் பதிவு மூலம் பாலிவுட் பிரபலங்கள் எவ்வளவு சம்பாதிக்கிறார்கள் தெரியுமா?
இன்ஸ்டாகிராம் பதிவிற்கு அதிக பணம் பெறும் பாலிவுட் பிரபலங்கள்.
மும்பை
இன்ஸ்டாகிராம் என்ற சமூக வலைதளம் கடந்த 2010-ம் ஆண்டில் புகைப்படங்களை மட்டும் பகிரும் ஒரு செயலியாக அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் தற்போது பல்வேறு அம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு பேஸ்புக்கிற்கு அடுத்தபடியாக உலகளாவிய ஒரு சமூக வலைதளமாக தன்னை நிறுவிக் கொண்டுள்ளது.
இந்த இன்ஸ்டாகிராம் செயலியை பிரபலங்கள் பலரும் பயன்படுத்துகின்றனர். அவர்கள் வெறுமனே தங்களுடைய ரசிகர்களுடன் தொடர்பில் இருப்பதற்கு மட்டும் இந்த செயலியை பயன்படுத்துவதில்லை. அவர்களைப் பின்தொடர்பவர்களிடம் பலதரப்பட்ட பிராண்டுகளின் விளம்பரத்தை கொண்டு சேர்க்கவும் பயன்படுத்துகின்றனர். பாலிவுட் நடிகர், நடிகைகள் இன்ஸ்டாகிராமில் பிராண்டுகளை விளம்பரம் செய்ய கோடிக்கணக்கில் பணம் வாங்குகின்றனர்.
அந்த வகையில் இன்ஸ்டாகிராம் பதிவிற்கு அதிக பணம் பெறும் பாலிவுட் பிரபலங்கள் சிலரைப் பற்றிய தகவல்கள்:-
பிரியங்கா சோப்ரா
பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவை இன்ஸ்டாகிராமில் 7.3 கோடிக்கும் அதிகமானோர் பின்தொடர்கின்றனர் (Followers). இன்ஸ்டாகிராமில் அதிக பணம் பெறும் பாலிவுட் பிரபலங்களில் பிரியங்கா சோப்ராவும் ஒருவர். இவர் ஒரு பதிவிற்கு ஏறக்குறைய 1.8 கோடி ரூபாய் வாங்குகிறார்.
ஆலியா பட்
நடிகை ஆலியா பட்டை இன்ஸ்டாகிராமில் 5.8 கோடிக்கும் அதிகமானோர் பின்தொடர்கின்றனர். இவர் ஒரு பதிவிற்கு ஏறக்குறைய 1 கோடி ரூபாய் வாங்குகிறார்.
ஷாருக்கான்
பாலிவுட்டின் அரசன் என்று அழைக்கப்படும் நடிகர் ஷாருக்கான் ஒரு இன்ஸ்டாகிராம் பதிவிற்கு ஏறக்குறைய 80 லட்சம் முதல் 1 கோடி ரூபாய் வரை வாங்குகிறார். ஷாருக்கானை 2.7 கோடிக்கும் அதிகமானோர் இன்ஸ்டாகிராமில் பின்தொடர்கின்றனர்.
தீபிகா படுகோனே
பாலிவுட்டில் அதிக சம்பளம் பெறும் நடிகையான தீபிகா படுகோனேவை இன்ஸ்டாகிராமில் 6.4 கோடிக்கும் அதிகமானோர் பின்தொடர்கின்றனர். இவர் ஏறக்குறைய 1.5 கோடி ரூபாய் வரை ஒரு பதிவிற்கு வாங்குகிறார்.
அக்ஷய் குமார்
பாலிவுட்டின் கில்லாடி என்று அழைக்கப்படும் அக்ஷய் குமார் ஒரு இன்ஸ்டாகிராம் பதிவிற்கு ஏறக்குறைய 1 கோடி ரூபாய் வரை வாங்குகிறார். அக்ஷய் குமாரை 5.9 கோடிக்கும் அதிகமானோர் இன்ஸ்டாகிராமில் பின்தொடர்கின்றனர்.