நடிகர் ரஜினிகாந்தின் 71வது பிறந்தநாள்: கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்த ரசிகர்கள்!

நடிகர் ரஜினிகாந்தின் 71வது பிறந்தநாளையொட்டி ரசிகர்கள் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர்.

Update: 2021-12-12 03:03 GMT
சென்னை,

முயற்சி திருவினையாக்கும் என்பதற்கு சிறந்த உதாரணமாக சிவாஜி ராவ் கெய்க்வாட் எனும் கண்டக்டர் தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தாக 40 ஆண்டுளுக்கும் மேலாக கோலோச்சி வருகிறார். நடிகர் ரஜினிகாந்தின் 71வது பிறந்தநாள் கொண்டாட்டம் சமூக வலைதளங்களில் களைகட்டி உள்ளது.

#HBDSuperstarRajinikanth என்றும் #Thalaiva என்றும் ரஜினிகாந்த் ரசிகர்கள்  டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களை தெறிக்க விட்டு வருகின்றனர். சினிமா பிரபலங்கள் ரஜினிகாந்தின் பிறந்தநாள் ஸ்பெஷல் காமன் டிபிக்களையும் வெளியிட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் ரஜினிகாந்தின் 71-வது பிறந்தநாளையொட்டி ரசிகர்கள் போயஸ்கார்டன் அவரது இல்லம் முன்பு கூடிய வெளியே நள்ளிரவில் 12 மணி அளவில் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர். 

மேலும் செய்திகள்