ஆந்திர வெள்ள நிவாரணத்திற்காக ரூ.1 கோடி நிதி அளித்த நடிகர் பிரபாஸ்
ஆந்திர மாநிலத்தில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புகளுக்காக நடிகர் பிரபாஸ் ரூ.1 கோடி நிவாரண நிதி அளித்துள்ளார்.
ஐதராபாத்,
சில தினங்களுக்கு முன் வங்கக் கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. ஆந்திர மாநிலத்தில் குறிப்பாக திருப்பதி, சித்தூர், நெல்லூர், கடப்பா, அனந்தபூர் ஆகிய பகுதிகளில் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இந்த நிலையில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் நிவாரண பணிகளை மேற்கொள்வதற்காக, ஆந்திர முதல்-மந்திரியின் நிவாரண நிதிக்கு நடிகர் பிரபாஸ் ரூ.1 கோடி வழங்கியுள்ளார். இதற்கு முன்னதாக தெலுங்கு நடிகர்கள் சிரஞ்சீவி, ஜூனியர் என்.டி.ஆர், மகேஷ்பாபு, ராம் சரண் ஆகியோர் முதல்-மந்திரி நிவாரண நிதிக்கு தலா ரூ.25 லட்சம் நிதியுதவி அளிப்பதாக அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.