மகனுடன் படகு சவாரி சென்ற நடிகை மாயம்; தற்கொலை செய்திருக்கலாம் என அச்சம்
4 வயது மகனுடன் படகு சவாரி சென்ற நடிகை மாயம்; தற்கொலை செய்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
கலிபோர்னியா
பிரபல டிவி நட்சத்திரம் நயா ரிவேரா நேற்று தனது 4 வயது மகனுடன் படகு சவாரி சென்றார்.அவர் இன்றுவரை திரும்பாததால் அவர் இறந்து இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
அவரது நான்கு வயது மகன் ஜோசி டோர்சின் யுட் கலிபோர்னியாவின் ஏரியில் வாடகை படகில் தனியாக சவாரி சென்றார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் கரை திரும்பவில்லை. இதையடுத்து தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. சிறிது நேரத்தில் அவரது மகன் கண்டுபிடிக்கப்பட்டார்.
சிறுவன் தனது அம்மா "தண்ணீரில் குதித்தார், ஆனால் மீண்டும் மேலே வரவில்லை" என்று போலீசாரிடம் கூறினார்.
ஹெலிகாப்டர்கள், ஆளில்லா விமானம் மற்றும் டைவ் குழுக்களைப் பயன்படுத்தி தேடுதல் நடவடிக்கை நடைபெற்ற விடிய விடிய நடந்த தேடுதலில் ஒருதகவலும் கிடைக்கவில்லை. இன்று காலை முதல் தேடுதல் வேட்டை நடந்து வந்தது. ஆனால் ஒருதகவலும் கிடைக்கவில்லை.
அவர் தற்கொலை செய்து இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.