தமிழ் திரைப்பட நடிகர், நடிகைகள் சம்பளத்தில் 50% குறைக்க முடிவு?

தமிழ் திரைப்பட நடிகர், நடிகைகள் சம்பளத்தில் 50% குறைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2020-07-07 17:42 GMT
சென்னை,

படப்பிடிப்புகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கொரோனா விவகாரத்தால் பெரிய திரை, சின்னத்திரை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸின் தாக்கம் குறைவதற்கு பதில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இதனால் அன்றாடம் உழைத்தால் தான் சாப்பாடு என்று இருக்கும் சினிமா கலைஞர்களின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.

வேலை இல்லாமல் பலர் மன அழுத்தத்தில் இருக்கிறார்கள். சிலர் மன அழுத்தம் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்நிலையில் தயாரிப்பாளர்களின் பரிதாப நிலையை உணர்ந்து சில நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள் தங்கள் சம்பளத்தை 50% குறைக்க திட்டமிட்டுள்ளதாகவும்,  கொரோனா பாதிப்பு சூழல் சீரான பிறகு பழைய முறையில் சம்பளம் வழங்கப்படும் திரைப்பட தயாரிப்பாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்