கொரோனா பாதிப்பு :"உண்மையான தகவலை தமிழக அரசு பகிரவில்லை"- கமல்ஹாசன்
கொரோனா பாதிப்பு குறித்து உண்மையான தகவலை தமிழக அரசு பகிரவில்லை என கமல்ஹாசன் குற்றம்சாட்டி உள்ளார்.
சென்னை
பரவலான பரிசோதனை செய்யப்படாததே பொது முடக்கத்திற்கும் பொருளாதார முடக்கத்திற்கும் காரணம் என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
மக்களின் ஒத்துழைப்பை தொடர்ந்து வென்று எடுப்பதற்கு உண்மையான தகவல்களை தமிழக அரசு பகிரவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். வெளிப்படை தன்மையின்றி செயல்பட்டதே ஊரடங்கிற்குள் ஊரடங்கு என்ற நிலை ஏற்பட காரணம் எனவும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.