காசுக்கு ஆசைப்பட்டு, மதுக்கடைகளை திறக்க நீதிமன்றத்தில் வாதாடும் அதிமுக அரசு - கமல்ஹாசன்
காசுக்கு மட்டும் ஆசைப்பட்டு, மதுக்கடைகளை திறக்க நீதிமன்றத்தில் வாதாடிக் கொண்டிருக்கிறது அதிமுக அரசு என கமல்ஹாசன் குற்றம்சாட்டி உள்ளார்.
சென்னை
தமிழகத்தில் மே 7 ஆம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதற்கு நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் கமல்ஹாசன் கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இந்தநிலையில், இன்று தனது டுவிட்டர் பக்கத்தில், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசை கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார். அவர் கூறி இருப்பதாவது:-
முன்னேற்றத்தில் முதலிடத்தில் இருக்க வேண்டிய தமிழகம் பின்னடைவில் முதலிடத்தை நோக்கி நகர்கிறது. கொரோனா பாதிப்பில் 8 ஆம் இடத்திலிருந்து 2 ஆம் இடத்தை எட்டிப் பிடித்து விட்டது. காசுக்கு மட்டும் ஆசைப்பட்டு, மதுக்கடைகளை திறக்க நீதிமன்றத்தில் வாதாடிக் கொண்டிருக்கிறது அதிமுக அரசு எனப் பதிவிட்டுள்ளார்.