சன்னி லியோனின் வித்தையை பார்க்க ஆசையா ...! வீடியோவை பாருங்கள்
நடிகை சன்னி லியோன் மேஜிக் செய்து டிக் டாக் வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
மும்பை
பாலிவுட் நடிகை சன்னி லியோன், தனது புதிய டிக்டாக் வீடியோவை, இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வைரலாக்கி உள்ளார். மேலும், அந்த வீடியோவில் மிஸ்டர் இந்தியா என்ற ஹேஷ்டேக்கை போட்டு, தனது அடுத்த படத்தின் அறிவிப்பையும் வெளிப்படுத்தியுள்ளார்.
சன்னிலியோன் சமூக ஊடகத்தில் வேடிக்கையான வீடியோக்களுடன் சன்னி லியோன் எப்போதும் தனது ரசிகர்களை கிண்டல் செய்வது வழக்கம்
மிஸ்டர் இந்தியா என்ற ஹேஷ்டேக்குடன் வெளியிட்டுள்ள தனது சமீபத்திய டிக்டோக் வீடியோவில் சன்னி லியோன் ஒரு வெள்ளை மற்றும் மஞ்சள் செங்கல் சுவரின் முன் நின்று கொண்டு ஒரு ஹூலா ஹூப் மூலம் தந்திரங்களைச் செய்கிறார்.
இந்த வீடியோ தற்போது மிஸ்டர் இந்தியா ரீமேக் தொடர்பான சர்ச்சையையும் ஏற்படுத்தி உள்ளது.
மிஸ்டர் இந்தியா 1987 ஆம் ஆண்டில் வெளியான திரைப்படம், அதில் அனில் கபூர் தன்னை கண்ணுக்கு தெரியாதவாறு காட்ட கடிகாரத்தை அணிந்திருந்தார். அதில் அனில் கபூர், ஸ்ரீதேவி மற்றும் அம்ரிஷ் பூரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். சேகர் கபூர் இயக்கி இருந்தார்.