கேரளா வெள்ள சேதத்துக்கு நடிகை நயன்தாரா ரூ.10 லட்சம் உதவி சிவகார்த்திகேயனும் ரூ.10 லட்சம் கொடுத்தார்

கேரள மழை-வெள்ள பாதிப்புக்கு நடிகை நயன்தாரா ரூ.10 லட்சமும், சிவகார்த்திகேயனும் ரூ.10 லட்சமும் வழங்கினார்கள்.

Update: 2018-08-17 22:47 GMT
சென்னை,

கேரளாவில், வரலாறு காணாத மழை, வெள்ளம், நிலச்சரிவு ஆகிய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதுவரை 300-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி இருக்கிறார்கள்.

கேரள மழை-வெள்ள பாதிப்புக்கு திரையுலகை சேர்ந்த நடிகர்- நடிகைகள் தாராளமாக உதவி வருகிறார்கள். முதல்- மந்திரி பினராயி விஜயன் பெயருக்கு நிவாரண உதவிகளை அனுப்பி வருகிறார்கள். நடிகை நயன்தாரா நேற்று ரூ.10 லட்சத்துக்கான காசோலையை வெள்ள நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்தார். நடிகர் சிவகார்த்தி கேயன் ரூ.10 லட்சம் உதவி தொகையை அனுப்பியிருக்கிறார்.

மேலும் செய்திகள்