மரத்தை வெட்டியதாக புகார் இந்தி நடிகர் ரிஷிகபூர் மீது வழக்குப்பதிவு

பிரபல இந்தி நடிகர் ரிஷிகபூர். இவருக்கு மும்பையில் உள்ள பாந்திராவில் சொந்தமாக பங்களா உள்ளது. இந்த பங்களா சீரமைக்கப்பட்டு கட்டப்பட்டு வருகிறது.

Update: 2017-06-02 21:25 GMT

மும்பை,

பிரபல இந்தி நடிகர் ரிஷிகபூர். இவருக்கு மும்பையில் உள்ள பாந்திராவில் சொந்தமாக பங்களா உள்ளது. இந்த பங்களா சீரமைக்கப்பட்டு கட்டப்பட்டு வருகிறது. கட்டுமான பணிகளுக்கு அங்குள்ள ஒரு மரம் இடையூறாக இருந்ததாக கூறப்படுகிறது. அந்த மரத்தின் இலைகளை மட்டும் கத்தரிக்க ரிஷிகபூருக்கு மாநகராட்சி அனுமதி வழங்கியது.

ஆனால் அவர் தனியார் ஒப்பந்ததாரர் மூலம் மரக்கிளைகளை வெட்டி அப்புறப்படுத்தியதாக தெரிகிறது. இது குறித்து அப்பகுதி மக்கள் மாநகராட்சிக்கு புகார் தெரிவித்தனர். இதையடுத்து ரிஷிகபூரிடம் விளக்கம் கேட்டு மாநகராட்சி சார்பில் அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ரிஷிகபூர் தனது விளக்கத்தை பதில் கடிதமாக மாநகராட்சிக்கு அனுப்பி வைத்திருந்தார்.

ஆனால் அவர் தெரிவித்து இருந்த விளக்கத்தை மாநகராட்சி ஏற்க மறுத்து விட்டது. மேலும் மரத்தை வெட்டியதாக நடிகர் ரிஷிகபூர், தனியார் ஒப்பந்ததாரர் இருவர் மீதும் கார் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்