யுவன் சங்கர் ராஜா வெளியிடும் ஷான் ரோல்டன் படத்தின் முதல் பாடல்

இயக்குனர் விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் 'ஜெய் பீம்' மணிகண்டன் கதையின் நாயகனாக நடித்துள்ள படம் ‘குட் நைட்’. இப்படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

Update: 2023-04-04 16:50 GMT

'ஜெய் பீம்' மணிகண்டன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் 'குட் நைட்'. இப்படத்தை அறிமுக இயக்குனர் விநாயக் சந்திரசேகரன் இயக்கியுள்ளார். இப்படத்தின் நாயகியாக மீதா ரகுநாத் நடித்துள்ளார். இதில் ரமேஷ் திலக், பாலாஜி சக்திவேல், பக்ஸ் என்ற பகவதி பெருமாள், ரேச்சல் ரெபாக்கா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ஜெயந்த் சேது மாதவன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். ரொமான்டிக் காமெடி ஜானரில் தயாராகி இருக்கும் இப்படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம்.ஆர்.பி என்டர்டெய்ன்மென்ட் இணைந்து தயாரித்துள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தின் பாடலை இசையமைப்பாளர் யுவன் இன்று மாலை 5 மணிக்கு வெளியிடவுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்