சூர்யாவுடன் இணைந்த பாலிவுட் பிரபலம்? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் படம் 'கங்குவா'. இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Update: 2023-07-24 16:40 GMT

இயக்குனர் சிவா இயக்கத்தில் சூர்யா தற்போது நடித்து வரும் திரைப்படம் 'கங்குவா'. ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இந்த படம் 3டி முறையில் சரித்திர படமாக 10 மொழிகளில் வெளியாகவுள்ளது. 'கங்குவா' திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டரை சமீபத்தில் படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தது. இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ சூர்யாவின் பிறந்தநாளை இன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் 'கங்குவா' படத்தில் பாலிவுட் நடிகர் பாபி டியோல் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்