தங்கலான் படப்பிடிப்பு ஒத்திகையில் விக்ரம் காயம் - விலா எலும்பு முறிவு
பொன்னியின் செல்வன் வெற்றியை தொடர்ந்து விக்ரம் தற்போது பா.இரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஒத்திகை படப்பிடிப்பின் போது விக்ரமுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் விக்ரம் ஆதித்த கரிகாலன் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். ஏப்ரல் 28ம் தேதி வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் இப்படத்தில் விக்ரமின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. இதனை தொடரந்து பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தங்கலான் படப்பிடிப்பு ஒத்திகையின் போது நடிகர் விக்ரமுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. ஒத்திகையின் போது ஏற்பட்ட விபத்தில் விம்ரமுக்கு விலா எலும்பு முறிந்துள்ளது. காயம் காரணமாக தங்கலான் படப்பிடிப்பில் விக்ரம் சிறிது காலம் பங்கேற்க மாட்டார் என்றும் விக்ரம் விரைவில் பூரண நலம் பெறுவார் என்றும் விக்ரம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.