முதற்கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்த விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி, தற்போது 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' படத்தை இயக்கிய ஆறுமுக குமார் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Update: 2023-06-13 16:58 GMT

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் சேதுபதி, தற்போது 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' படத்தை இயக்கிய ஆறுமுக குமார் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். 'புரொடக்ஷன் 5' என தற்காலிகமாக பெயர் வைத்துள்ள இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார்.

இப்படத்தில் ருக்மினி மற்றும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். விஜய் சேதுபதியின் 51வது படமான இப்படத்தை செவன் சி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் பூஜை சில தினங்களுக்கு முன்பு மலேசியாவில் உள்ள கோவிலில் நடைபெற்றது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.

இந்நிலையில் மலேசியாவில் நடைபெற்று வந்த இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக புகைப்படம் வெளியிட்டு படத்தின் இயக்குனர் ஆறுமுக குமார் தெரிவித்துள்ளார். மேலும் அடுத்தடுத்த அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் என குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்