சினிமா பயணத்தில் அஜித் எடுத்த தவறான முடிவு இது.. பதிலடி கொடுத்த விஜய்சேதுபதி நடிகை

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘நேர்கொண்ட பார்வை’. இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

Update: 2023-08-11 16:37 GMT

இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் 'நேர்கொண்ட பார்வை'. இப்படம் இந்தியில் அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியான 'பிங்க்' படத்தின் ரீமேக்காகும். இந்த படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ரங்கராஜ் பாண்டே உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

இப்படம் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து இப்படம் வெளியாகி நான்கு ஆண்டுகள் ஆன நிலையில் இப்படம் குறித்து பலரும் சமூக வலைதளத்தில் பதிவிட்டு வந்தனர். அப்போது ரசிகர் ஒருவர் 'நேர்கொண்ட பார்வை' அஜித் தனது சினிமா பயணத்தில் எடுத்த தவறான முடிவு என்று பதிவிட்டிருந்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக நடிகை காயத்ரி பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "ஒரு படத்தின் வெற்றிக்கு பாக்ஸ் ஆஃபிஸ் என்பதை மட்டுமே அளவுகோலாக வைக்கக் கூடாது. அது சமூகத்தில் எந்த விதமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதையும் பார்க்க வேண்டும். அஜித்தின் 'நேர்கொண்ட பார்வை' திரைப்படம் சமூகத்தில் பல விவாதங்களை ஏற்படுத்தியது. இனிமேலும் அது தொடரும்' என பதிவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்