புலிய பிடிக்கனும்னா புலிதான் வரனும்.. கவனம் ஈர்க்கும் 'ரெய்டு' பட டீசர்

இயக்குனர் கார்த்தி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘ரெய்டு’. இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது.

Update: 2023-03-24 16:45 GMT

வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் விக்ரம் பிரபு அடுத்ததாக 'ரெய்டு' திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் நடிகை ஸ்ரீதிவ்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இயக்குனர் கார்த்தி இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்திற்கு இயக்குனர் முத்தையா வசனம் எழுதியுள்ளார்.

ஓபன் ஸ்கிரீன் பிக்சர்ஸ், எம் ஸ்டூடியோஸ் மற்றும் ஜி பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு சாம் சி. எஸ். இசையமைத்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

அதன்படி, இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. அதிரடி ஆக்ஷன் காட்சிகள் நிறைந்துள்ள இந்த டீசரை ரசிகர்கள் இணையத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்