நாநா புலுக் பாடலை வெளியிட்ட பிச்சைக்காரன் 2 படக்குழு
விஜய் ஆண்டனி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பிச்சைக்காரன் -2’ திரைப்படம் மே 19ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இப்படத்தில் இடம்பெற்றுள்ள நாநா புலுக் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.
விஜய் ஆண்டனி நடித்த 'பிச்சைக்காரன்' படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது பிச்சைக்காரன் 2 திரைப்படம் உருவாகியுள்ளது. இதில் விஜய் ஆண்டனி நடிப்பதோடு மட்டுமல்லாமல் இயக்கியும் உள்ளார். இதில் காவ்யா தப்பார், ராதா ரவி, ஒயி ஜி மகேந்திரன், மன்சூர் அலிகான், ஜான் விஜய், ஹரிஷ் பேரடி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் மே 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் பிச்சைக்காரன் 2 படத்தில் இடம்பெற்றுள்ள நாநா புலுக் வீடியோ பாடலை படக்கு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ பாடல் ரசிகர்களை கவர்ந்து இணையத்தில் வைரலாகி வருகிறது.