கதாநாயகனான பாடலாசிரியர் பிரியன்
தமிழ்த்திரைக்கூடம் திரைப்பட நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ” அரணம் ” என்று பெயரிட்டுள்ளனர்.பிரபல பாடலாசிரியர் பிரியன் இந்த படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.
பிரபல பாடலாசிரியர் பிரியன். இவர் `மஸ்காரா போட்டு மயக்கிறியே', `மக்காயலா மக்காயலா', `வேலா வேலா வேலாயுதம்', `உசுமுலாரசே உசுமுலாரசே', `செக்ஸி லேடி கிட்ட வாடி', `மனசுக்குள் புதுமழை விழுகிறதே' உள்பட500-க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதி உள்ளார்.
இவர் `அரணம்' என்ற படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இதில் நாயகியாக வர்ஷா நடித்துள்ளார். லகுபரன், கீர்த்தனா ஆகியோரும் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி பாடலாசிரியர் பிரியனே டைரக்டும் செய்கிறார்.
படம் பற்றி அவர் கூறும்போது, ``ஒரு பெரிய ஜமீன் வீட்டில் வாழ்ந்து வந்த ஊதாரி மகன் திடீரென இறந்து விட அவன் பேயாக இருப்பதாக நம்பும் நிலையில் அந்த ஜமீன்தாரும் அதே வீட்டில் இறக்க அவரால் தத்தெடுத்து வளர்க்கப்பட்ட கதிர் புதுமனைவி யுடன் அந்த வீட்டில் குடியேறுகிறான். வீட்டை சுற்றி சில அமானுஷயங்கள் நடக்கின்றன. அந்த மர்மங்கள் என்ன, அதை கண்டுபிடித்து குடும்பத்தை எப்படி காப்பாற்றுகிறான் என்பது கதை'' என்றார். இசை:சாஜன் மாதவ், ஒளிப்பதிவு: நித்தின் கே.ராஜ், நவுசத்.