அதே குரல்.. அதே கனிவு.. அதே பணிவு.. 39 ஆண்டுகளுக்கு பிறகு வைரமுத்து வரிகளில் பாடிய சித்ரா

இயக்குனர் தங்கர் பச்சான் இயக்கத்தில் உருவாகி வரும் படம் கருமேகங்கள் கலைகின்றன. இப்படத்தில் இயக்குனர் பாரதிராஜா, யோகி பாபு, கவுதம் மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

Update: 2023-03-23 16:49 GMT

இயக்குனர் தங்கர் பச்சான் இயக்கி வரும் படம் 'கருமேகங்கள் கலைகின்றன'. இப்படத்தில் இயக்குனர் பாரதிராஜா, யோகி பாபு, கவுதம் மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைக்கும் இப்படத்திற்கு கவிஞர் வைரமுத்து பாடல் வரிகள் எழுதுகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது.

இப்படத்தின் ஒரு பாடலை ஜி.வி.பிரகாஷ் இசையில் பின்னணி பாடகி சித்ரா பாடி உள்ளார். இந்த பாடல் பதிவு சென்னையில் நடந்தது. இதுகுறித்து வைரமுத்து கூறும்போது, "39 ஆண்டுகளுக்கு முன்பு நான் எழுதிய 'பூஜைக்கேத்த பூவிது' பாடலை பாடிய அதே பாடகி சித்ராவை பாடல் பதிவில் சந்தித்தேன். அதே குரல். அதே கனிவு, அதே பணிவு'' என்று குறிப்பிட்டு உள்ளார்.

தங்கர் பச்சான் கூறும்போது, "நான் ஒளிப்பதிவாளனாக அறிமுகமாகிய (மலைச்சாரல்-1990) திரைப்படத்தில் வைரமுத்து பாடல்களை எழுதினார். அப்படத்தில் பாடகி சித்ராவும் பாடினார். எனது இயக்கத்தில் தற்போது 'கருமேகங்கள் கலைகின்றன' திரைப்படத்திலும் மூவருமே இணைந்து பணியாற்றுகின்றோம். தொடர்ந்து திரைக்கலையுலகில் மூவருமே பணியாற்றிக் கொண்டிருக்கின்றோம் என்பது மகிழ்ச்சியை அளிக்கின்றது'' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்