ஆர்.ஆர்.ஆர். இரண்டாம் பாகத்தில் ஆர்வம் காட்டும் ராஜமௌலி.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..

இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான படம் 'ஆர்ஆர்ஆர்'. இப்படத்தில் இடம் பெற்றுள்ள ‘நாட்டு நாட்டு’ பாடல் சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் விருதை வென்றது.

Update: 2023-03-17 16:42 GMT

ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான படம் 'ஆர்ஆர்ஆர்'. இப்படம் உலகம் முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் 25-ஆம் தேதி வெளியானது. தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் வெளியான இப்படம் நல்ல விமர்சனங்கள் பெற்று வசூல் சாதனையும் நிகழ்த்தியது.

இதையடுத்து, இப்படத்தில் இடம் பெற்றுள்ள 'நாட்டு நாட்டு' பாடல் சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் விருதை வென்றது. இது படக்குழுவினருக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், 'ஆர்ஆர்ஆர்' படத்தின் இரண்டாம் பாகத்தை விரைவாக எடுக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து இயக்குனர் ராஜமௌலி சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது, "ஆஸ்கார் விருது பெற்றது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இது எங்களுக்குள் மிகப்பெரிய உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆர் ஆர் ஆர் படத்தின் இரண்டாம் பாகம் எடுப்போம். அதற்கான பணிகளை வேகமாக தொடங்குவோம்'' என்றார்.

இதனால் 'ஆர்ஆர்ஆர்' இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்