புதிய வீடியோ வெளியிட்ட காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்

நடிகர் ஆர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் 'காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்'. இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

Update: 2023-06-06 18:06 GMT

இயக்குனர் முத்தையா இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் ஜூன் 2ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்'. இந்த படத்தில் 'வெந்து தணிந்தது காடு' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமான சித்தி இத்னானி கதாநாயகியாக நடித்திருந்தார். ராமநாதபுரம் பின்னணியில் உருவாகியிருந்த இந்த திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்திருந்தார்.

இந்நிலையில் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் 'காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்' படத்தின் ஸ்னீக் பீக் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளத்தில் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்